Sunday, May 23, 2010

ஹைக்கூ - ( கவிஞர். இரா.இரவி)

ஹைக்கூ

நல்ல விளைச்சல்
விளை நிலங்களில்
மகிழுந்து
நிறுவனங்கள்                    

கத்துக்குட்டி உளறல்
நதிநீர் இணைப்பு
எதிர்ப்பு

நல்ல முன்னேற்றம்
நடுபக்க ஆபாசம்
முகப்புப் பக்கத்தில்

இன்று குடிநீர்
நாளை சுவாசக்காற்று
விலைக்கு வாங்குவோம்

பெட்டி வாங்கியவர்
பெட்டியில் பிணமானவர்
பிணப்பெட்டி

உணவு சமைக்க உதவும்
ஊரை எரிக்கவும் உதவும்
தீக்குச்சி

நடிகை வரும் முன்னே
வந்தது
ஒப்பனை பெட்டி

தனியார் பெருகியதால்
தவிப்பில் உள்ளது
அஞ்சல் பெட்டி

தாத்தா பாட்டியை
நினைவூட்டியது
வெற்றிலைப்பெட்டி

நகைகள் அனைத்தும்
அடகுக் கடையில்
நகைப்பெட்டி?

மூடநம்பிக்கைகளில்
ஒன்றானது
புகார்ப்பெட்டி

  www.kavimalar.com

http://tamilparks.50webs.com/tamil_padaipugal/ravi_madurai.html
www.tamilauthors.com
www.wtrfm.com



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

63 comments:

  1. அம்மா ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    காணிக்கைக் கேட்காத
    கண் கண்ட கடவுள்
    அம்மா

    நடமாடும்
    தெய்வம்
    அம்மா

    கருவறை உள்ள
    கடவுள்
    அம்மா

    உயிர் தந்த உயிர்
    உயிர் வளர்த்த உயிர்
    அம்மா

    மனதில் அழியாத ஓவியம்
    மறக்க முடியாத காவியம்
    அம்மா

    ஆடுகளும் மாடுகளும் கூட
    உச்சரிக்கும் உயர்ந்த சொல்
    அம்மா

    வாய் பேசாத ஜீவன்களும்
    பேசிடும் ஒரே சொல்
    அம்மா

    மகனின் வாழ்வு ஒளிர்ந்திட
    உருகிடும் மெழுகு
    அம்மா

    உச்சங்களின் உச்சம்
    உலகின் உச்சம்
    அம்மா

    அன்பின் சின்னம்
    அமைதியின் திரு உருவம்
    அம்மா

    திசைக் காட்டும்
    கலங்கரை விளக்கம்
    அம்மா

    கரை சேர்க்கும் தோணி
    உயர்த்திடும் ஏணி
    அம்மா

    நேசம் பாசம் மிக்கவள்
    வேசம் அறியாதவள்
    அம்மா

    --

    --
    இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
    நன்றி
    அன்புடன்
    கவிஞர் இரா .இரவி

    www.eraeravi.com
    www.kavimalar.com
    eraeravi.wordpress.com
    eraeravi.blogspot.com

    http://eluthu.com/user/index.php?user=eraeravi
    இறந்த பின்னும்
    இயற்கையை ரசிக்க

    கண் தானம் செய்வோம் !!!!!

    ReplyDelete
  2. கண் தானம் ஹைக்கூ

    கவிஞர் இரா. இரவி, மதுரை

    இறந்த பின்னும்
    இருவருக்குப் பயன்படுமே
    விழிக்கொடை

    மண்ணுக்கும் தீக்கும்
    இரையாகும் விழிகளை
    மனிதனுக்கு வழங்குகள்

    இறந்த பின்னும்
    இவ்வுலகை இரசிக்க
    கண் தானம்

    ரசித்துப் பார்த்தால்
    ருசிக்கும் புத்தகம்
    வாழ்க்கை



    குஞ்சுகள் மிதித்து
    கோழிகள் காயம்
    முதியோர் இல்லம்


    வேண்டாம் மூடநம்பிக்கை
    வேண்டும் தன்னம்பிக்கை
    வெற்றி உன் கை


    பிஞ்சு நெஞ்சங்களில்
    நஞ்சு விதைப்பு
    ஊடகங்கள்

    ReplyDelete
  3. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    உருண்டது
    உலோகக் குண்டென
    தாமரையிலைத் தண்ணீர்

    வானிலிருந்து வரும்
    திரவத்தங்கம்
    மழை

    இரண்டும் சமம்
    மலை மண்
    மழைக்கு

    கழுவும் நீரே
    அழுக்கு
    சுத்தம் ?

    ஓய்வுக்கு ஒய்வு
    தந்தால்
    சாதிக்கலாம்

    சாதனைக்கு
    முதல் எதிரி
    சோம்பேறித்தனம்

    தண்ணீரைப் பெட்ரோலாக்கி
    வித்தைக் காட்டியவரிடம்
    வித்தைக் காட்டியது இயற்கை

    எலி மீது யானை
    எப்படிச் சாத்தியம்
    பிள்ளையார்



    கருவறை உள்ள
    நடமாடும் கடவுள்
    தாய்

    பல் பிடுங்கிய
    பாம்பாக
    தோற்ற அரசியல்வாதி

    இன்றும் சொல்கின்றது
    மன்னனின் பெயரை
    அரண்மனை

    பெருமூச்சு விட்டாள்
    தங்கக்கோபுரம் பார்த்து
    முதிர்கன்னி

    கல்லுக்குள் தேரை
    பறைக்குமேல் செடி
    மனிதனுக்குள் மனிதநேயம் ?

    --

    --
    இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
    நன்றி
    அன்புடன்
    கவிஞர் இரா .இரவி

    www.eraeravi.com
    www.kavimalar.com
    eraeravi.wordpress.com
    eraeravi.blogspot.com

    http://eluthu.com/user/index.php?user=eraeravi
    இறந்த பின்னும்
    இயற்கையை ரசிக்க

    கண் தானம் செய்வோம் !!!!!

    ReplyDelete
  4. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    கூடுதலாக உண்டு
    தாய்மண் பாசம்
    புலம் பெயர்ந்தவர்களுக்கு

    வெந்நீர் ஊற்றியபோதும்
    வளரும் செடிகள்
    புலம் பெயர்ந்தவர்கள்

    பயன்பட்டது
    சாக்கடைநீரும்
    தீ அணைக்க

    கூடலின் அருமை
    உணர்த்தியது
    ஊடல்

    ஈடில்லா வேகம்
    பின்னோக்கிப் பார்ப்பதில்
    மலரும் நினைவுகள்

    உடலின் மச்சமென
    நீங்காத நினைவு
    காதல்

    இனிமை இனிமை
    சின்னத் தீண்டல்
    சிந்தையில் கிளர்ச்சி

    கோலமிட்டுச் சென்றது
    சாலையில்
    தண்ணீர் லாரி

    பிணமானபின்னும்
    காசு ஆசை
    நெற்றியில் காசு

    தடுக்கி விழுந்ததும்
    தமிழ் பேசினான்
    அம்மா

    வந்துவிட்டது
    சேலையிலும் சைவம்
    சைவப்பட்டு

    கொன்ற கோபம்
    இன்னும் தீரவில்லை
    அதிரும் பறை

    உயராத கூலி
    உயரும் விலைவாசி
    வேதனையில் ஏழைகள்

    அயல்நாட்டில் ஊறுகாய்
    நம்நாட்டில் சாப்பாடு
    தொலைக்காட்சி


    மழை வந்ததும்
    உடன் வந்தது
    மண்வாசைனை

    ReplyDelete
  5. காந்தியடிகள் ஹைக்கூ
    கவிஞர் இரா .இரவி

    அகிம்சையை உணர்த்திய
    அறிவு ஜீவி
    காந்தியடிகள்

    ரகசியம் இல்லாத
    அதிசய மாமனிதர்
    காந்தியடிகள்

    கொண்ட கொள்கையில்
    குன்றென நின்றவர்
    காந்தியடிகள்

    திருக்குறள் வழி
    வாழ்ந்த நல்லவர்
    காந்தியடிகள்

    சுட்ட கொடியவனையும்
    மன்னித்த மாமனிதர்
    காந்தியடிகள்

    உலகம் வியக்கும்
    ஒப்பில்லாத் தலைவர்
    காந்தியடிகள்

    வன்முறை தீர்வன்று
    வையகத்திற்கு உணர்த்தியவர்
    காந்தியடிகள்

    நெஞ்சுரத்தின் சிகரம்
    நேர்மையின் அகரம்
    காந்தியடிகள்

    அரை ஆடை அணிந்த
    பொதுஉடைமைவாதி
    காந்தியடிகள்

    வெள்ளையரின்
    சிம்ம சொப்பனம்
    காந்தியடிகள்

    மனித உரிமைகளின்
    முதல் குரல்
    காந்தியடிகள்

    அமைதியின் சின்னம்
    அடக்கத்தின் திரு உருவம்
    காந்தியடிகள்

    அன்றே உரைத்தவர்
    உலக மயத்தின் தீமையை
    காந்தியடிகள்

    மனிதருள் மாணிக்கம்
    மாமனிதருக்கு இலக்கணம்
    காந்தியடிகள்

    ReplyDelete
  6. கவிஞர் இரா .இரவி

    ஹைக்கூ
    சுந்தர இலங்கை
    சுடுகாடானது
    சிங்கள இனவெறியால்

    மழையை வெறுத்தான்
    விவசாயி
    அறுவடையில் வந்ததால்

    அதிர்ச்சிதான்
    முகம் காட்டும் கண்ணாடி
    அகம் காட்டினால்

    பூமி வெப்பமயமாவதால்
    மனிதன் வெப்பமாகிறான்
    வன்முறை

    வளரும் நாடுகள்
    வளரத்தடை
    வளர்ந்தநாடுகள்

    ReplyDelete
  7. டாஸ்மாக் ஹைக்கூ இரா. இரவி

    அரசாங்கம் நடத்தும்
    அவமானச்சின்னம்
    டாஸ்மாக்

    பாதை தவறியவர்கள்
    போதை வாங்குமிடம்
    டாஸ்மாக்

    காந்தியடிகளுக்கு பிடிக்காத இடம்
    குடிமகன்களுக்கு பிடித்த இடம்
    டாஸ்மாக்

    குடிமகன்களிடமிருந்து கரந்து
    அரசாங்கத்திற்கு வழங்கும்
    கற்பக காமதேனு டாஸ்மாக்

    வருமானம் பெருகப் பெருக
    அவமானம் பெருகுகின்றது
    டாஸ்மாக்

    பாஸ் மார்க் வாங்கியும்
    க்ளாஸ் பாட்டிலுடன் வேலை
    டாஸ்மாக்

    ஈழம் அழிந்தாலும் கவலையின்றி
    தமிழினம் ஒழிந்தாலும் கவலையின்றி
    நிரம்பி வழியும் கூட்டம் டாஸ்மாக்

    போதை சுகத்தில் குடிமகன்
    சொல்லில் அடங்கா சோகத்தில் குடும்பம்
    டாஸ்மாக்

    விதவைகளின் எண்ணிக்கையை
    விரிவாக்கம் செய்யுமிடம்
    டாஸ்மாக்

    வருங்கால தூண்கள்
    வழுக்கி விழுமிடம்
    டாஸ்மாக்

    இலவசமாய் நண்பன் தருவதாக
    இளித்துக் கொண்டு போகுமிடம்
    டாஸ்மாக்

    இமயமாக உயர வேண்டியவன்
    படு பாதாளத்தில் விழுமிடம்
    டாஸ்மாக்

    ReplyDelete
  8. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    குடல் பசியை போக்கிட
    உடல் விலை போகிறது
    விபச்சாரம்

    மிதப்பதாக நினைத்து
    மூழ்குபவன்
    குடிகாரன் …

    சுவரில் எழுதாதே !
    சுவர் முழுவதும்
    எழுதிருந்தது …

    அப்பாவும் மகனும்
    ஒரே வரிசையில்
    வேலைவாய்ப்பு அலுவலகம்

    விதவை வானம்
    மறுநாளே மறுமணம்
    பிறை நிலவு

    எழுத்தில் மட்டும்
    செயலில் இல்லை
    “வாய்மையே வெல்லும் ”

    கடவுளை நம்பினோர்
    கைவிடபடார்
    “சபரிமலையாத்திரை விபத்து ”

    கீர்த்தியால் பசி தீருமா ?
    ராமர் கோவிலால்
    ஏழைக்கு விடியுமா ?

    கவிஞர் இரா. இரவி, மதுரை

    ReplyDelete
  9. ஹைக்கூ ராஜபட்சே கவிஞர் இரா .இரவி

    ஹிட்லரின் தற்கொலை
    முடிவை நீயே எடு
    ராஜபட்சே

    மரணம் உறுதி
    விரைவில் இறுதி
    ராஜபட்சே

    தப்புச் செய்தவன்
    தப்பிக்கப் பார்க்கிறான்
    ராஜபட்சே

    பலநாள் கொலைகாரன்
    ஒரு நாள் அகப்பட்டான்
    ராஜபட்சே

    கெட்டிக்காரன் புளுகு
    எட்டு நாளைக்குதான்
    ராஜபட்சே

    வணங்கிய புத்தரும்
    கைகழுவினார்
    ராஜபட்சே

    மொட்டைப் பிட்சுக்களால்
    காக்க முடியாது உன்னை
    ராஜபட்சே

    எத்தனுக்கு எத்தன்
    உலகில் உண்டு உணர்
    ராஜபட்சே

    முகத்தில் தெரியுது
    மரணபயம் உனக்கு
    ராஜபட்சே

    வினை விதைத்தவன்
    வினை அறுப்பான் உண்மை
    ராஜபட்சே

    கூட்டுக்களவானி பொன்சேகா
    உன்னுடன் இல்லை
    ராஜபட்சே
    --

    ReplyDelete
  10. (ஹைகூ கவிதை)

    கவிஞர் இரா .இரவி

    பூகம்பம் வரும் முன்
    அறியும் தவளை
    மனிதன் ?

    சேமிக்கும் எறும்பு
    மழைக் காலத்திற்கு
    மனிதன் ?

    நன்றி மறக்காது
    வாலாட்டும் நாய்
    மனிதன் ?

    பசிக்காமல் உண்பதில்லை
    விலங்குகள்
    மனிதன் ?

    பிறந்ததும் உடன்
    நீந்திடும் மீன்
    மனிதன் ?

    அடைகாக்கும் காகம்
    குயிலின் முட்டையையும்
    மனிதன் ?

    காடுகள் வளரக்
    காரணம் பறவைகள்
    மனிதன் ?

    சீண்டாமல் எவரையும்
    கொத்தாது பாம்பு
    மனிதன் ?

    ஓடிடச் சலிப்பதில்லை
    மான்
    மனிதன் ?

    அசைவம் உண்ணாது
    அசைவம் ஆகின்றது
    ஆடு

    கொள்ளையர்களின்
    கூடாரமானது
    கல்வி நிறுவனங்கள்

    ReplyDelete
  11. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி


    பார்க்காதவர்கள் பாருங்கள்
    தேவதை
    என்னவள்

    நடந்து சென்றாள்
    கடந்து சென்றாள்
    கடத்திச்சென்றாள்

    சக்தியில்
    மின்சாரத்தை வென்றது
    அவள் கண்சாரம்

    வேண்டாம் வண்ணம்
    இயற்கையாகவே சிகப்பு
    அவள் இதழ்கள்

    உச்சரிப்பை விட
    அசைவே அழகு
    அவள் இதழ்கள்

    செவிகளை விட
    விழிகளுக்கு இன்பம்
    அவள்

    ஆயிரம்
    அர்த்தம் உண்டு
    மவுனத்திற்கு

    வருகிறது
    பெரு மூச்சு
    அவளை நினைத்தாலே

    இன்று நினைத்தாலும்
    மனதில் மகிழ்ச்சி
    அவள் புன்னகை

    கால்தடம் அழித்தது
    கடல் அலை
    உள்ளத்தின் தடம் ?

    முகம் சிரித்தாலும்
    அகம் அழுகின்றது
    காதல் தோல்வி

    சோகமான முடிவுகள்
    சுகமான சுமைகள்
    காதல் தோல்வி


    அருமை அறியாதவனிடம்
    அகப்பட்டால்
    வீணையும் விறகுதான்

    நடிகர்களின் ஆசை
    நடிகைகளையும் தொற்றியது
    வாரிசு அறிமுகம்

    ஒரே வரிசையில்
    தமிழ் அறிஞர்களும், ஆபாச நடிகைகளும்
    கலைமாமணி பட்டமளிப்பில்

    வில் அம்பு
    விளம்பரமோ ?
    அவள் விழிகள்


    இன்றும் காணலாம்
    டைனோசர்கள்
    அரசியல்வாதிகள்

    சுருங்கச்சொல்லி
    விளங்கவைத்தல்
    ஹைக்கூ

    வாடிக்கையானது
    காக்காக் குளியல்
    பெரு நகரங்களில்

    ராமன் ஆண்டாலும்
    ராவணன் ஆண்டாலும்
    ஒழியவில்லை வறுமை

    உலகெலாம் பரவியது
    தேமதுரத் தமிழோசை அல்ல
    ஊழல் ஓசை

    பெருகப் பெருக
    பெருகுது வன்முறை
    மக்கள்தொகை

    பலதாரம் முடித்தவர்
    பண்பாட்டுப் பேச்சு
    ஒருவனுக்கு ஒருத்தி

    சிலைகளில் தெரிந்தது
    ஆடை அணிகலனும்
    சிற்பியின் சிறப்பும்

    கூட்டம் கூடுவதில்லை
    இலக்கிய விழாக்களுக்கு
    தொலைகாட்சிகளால்

    நிஜத்தை வென்றது நிழல்
    நாடகத்தை வென்றது
    திரைப்படம்

    ReplyDelete
  12. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    ஓராயிரம் பொருள் கிடைக்கும்
    உற்று நோக்கினால்
    படைப்பதற்கு

    மேடுகளைத் தகர்த்து
    பள்ளம் நிரப்பு சமத்துவம்
    பொதுவுடமை

    விழி இரண்டு போதாது
    வனப்பை ரசிக்க
    வண்ண மலர்கள்

    ஒய்வதில்லை
    விண்ணும் மண்ணும் அலையும்
    ஒய்ந்திடும் மனிதன்

    வெட்ட வெட்ட
    வளரும் பனைமரம்
    பாராட்ட வளரும் குழந்தை

    குடியால் கோடிகள் திரட்டி
    கோடித் துணி தந்தனர்
    ஏழைகளுக்கு

    புதிய பொருளாதாரம்
    கல்வி தனியார் மயம்
    மது அரசுமயம்

    உருவமின்றியும்
    தேசப்படுத்தியது வாழையை
    காற்று

    அன்றே அநீதி
    ஆண்களுக்கு கை சிலம்பு
    பெண்களுக்கு கால் சிலம்பு

    இருப்புப் பாதையில்
    இருப்பின்றி பயணம்
    தொடர் பயணம்

    கழிவுநீர் உறிஞ்சி
    இளநீர் தரும்
    உயர்ந்த தென்னை

    யார் உயர் திணை
    மோதி விழும் மனிதன்
    கூடி வாழும் பறவைகள்

    விளைவித்தன கேடு
    கண்ணிற்கும் மனதிற்கும்
    தொல்(ல்) லைக்காட்சிகள்

    தரம் தாழ்ந்தால்
    களையாகும்
    கலை

    மாடு செரிப்பதற்கும்
    மனிதன் மகிழ்வதற்கும்
    உதவிடும் அசைபோடுதல்

    போராட்டம் நடிப்பு அரசியலில்
    பேராட்டமே வாழ்க்கை
    ஏழைகளுக்கு

    கண்ணிற்கு குளிர்ச்சி
    மனதிற்கு மகிழ்ச்சி
    இயற்கை

    மனம் வருந்துவதில்லை
    மங்கையர் சூடாததற்கு
    எருக்கம் பூக்கள்

    அங்கிகரிக்கப்பட்ட
    சூதாட்டம்
    பங்குச்சந்தை

    ReplyDelete
  13. பறக்காமல் நில்
    பிடிக்க ஆசை
    பட்டாம்பூச்சி

    பறவை கூண்டில்
    புள்ளிமான் வலையில்
    மழலை பள்ளியில்

    வானத்திலும் வறுமை
    கிழிசல்கள்
    நட்சத்திரங்கள்

    புத்தாடை நெய்தும்
    நெசவாளி வாழ்க்கை
    கந்தல்

    உயரத்தில்
    பஞ்சுமிட்டாய்
    வான் மேகம்

    டயர் வண்டி ஓட்டி
    நாளைய விமானி
    ஆயத்தம்

    பிறரின் உழைப்பில் தன்னை
    பிரகாசிக்க வைத்துக் கொள்ளும்
    முழு நேர சோம்பேறிகள் முதலாளி

    சந்திரன் அல்லி
    நான் அவள்
    காதல்

    கடல் கரைக்கு
    அனுப்பும் காதல் கடிதம்
    அலைகள்...

    அமாவாசை நாளில்
    நிலவு
    எதிர் வீட்டுச் சன்னலில்

    விதவை வானம்
    மறுநாளே மறுமணம்
    பிறை நிலவு

    வழியில் மரணக்குழி
    நாளை
    செய்தியாகி விடுவாய்

    கோடை மழை
    குதூகலப்பயணம்
    திரும்புமா? குழந்தைப்பருவம்

    வானம்.
    கட்சி தாவியது
    அந்திவானம்.

    மழையில் நனைந்தும்
    வண்ணம் மாறவில்லை
    வண்ணத்துப்பூச்சி

    மானம் காக்கும் மலர்
    வானம் பார்க்கும் பூமியில்
    பருத்திப்பூ

    என்னவளே உன்
    முகத்தைக் காட்டு...
    முகம் பார்க்கவேண்டும்

    ஒலியைவிட ஒளிக்கு
    வேகம் அதிகம்
    பார்வை போதும்

    கிருமி தாக்கியது
    உயிரற்ற பொருளையும்
    கணினியில் வைரஸ்

    மரபுக் கவிதை
    எதிர்வீட்டு சன்னலில்
    என்னவள்...

    நல்ல விளைச்சல்
    விளை நிலங்களில்
    மகிழ்ந்து நிறுவனங்கள்

    கத்துக்குட்டி உளறல்
    நதிநீர் இணைப்பு
    எதிர்ப்பு

    நல்ல முன்னேற்றம்
    நடுபக்க ஆபாசம்
    முகப்புப் பக்கத்தில்

    இன்று குடிநீர்
    நாளை சுவாசக்காற்று
    விலைக்கு வாங்குவோம்

    பெட்டி வாங்கியவர்
    பெட்டியில் பிணமானவர்
    பிணப்பெட்டி

    உணவு சமைக்க உதவும்
    ஊரை எரிக்கவும் உதவும்
    தீக்குச்சி

    நடிகை வரும் முன்னே
    வந்தது
    ஒப்பனை பெட்டி

    தனியார் பெருகியதால்
    தவிப்பில் உள்ளது
    அஞ்சல் பெட்டி

    தாத்தா பாட்டியை
    நினைவூட்டியது
    வெற்றிலைப்பெட்டி

    நகைகள் அனைத்தும்
    அடகுக் கடையில்
    நகைப்பெட்டி?

    மூடநம்பிக்கைகளில்
    ஒன்றானது
    புகார்ப்பெட்டி

    கரைந்தது காகம்
    வந்தனர் விருந்தினர்
    காகத்திற்கு

    அவசியமானது
    புற அழகல்ல
    அக அழகுதான்

    சண்டை போடாத
    நல்ல நண்பன்
    நூல்

    ரசித்து படித்தால்
    ருசிக்கும் புத்தகம்
    வாழ்க்கை

    சக்தி மிக்கது
    அணுகுண்டு அல்ல
    அன்பு

    அழகிய ஓவியிமான்து
    வெள்ளை காகிதம்
    துரிகையால்

    மழை நீர் அருவி ஆகும்
    அருவி நீர் மழை ஆகும்
    ஆதவனால்

    ஒன்று சிலை ஆனது
    ஒன்று அம்மிக்கல் ஆனது
    பாறை கற்கள்

    காட்டியது முகம்
    உடைந்த பின்னும்
    கண்ணாடி

    உருவம் இல்லை
    உணர்வு உண்டு
    தென்றல்

    பாத்ததுண்டா மல்லிகை
    சிவப்பு நிறத்தில்
    வாடா மல்லிகை

    கூர்ந்து பாருங்கள்
    சுறுசுறுப்பை போதிக்கும்
    வண்ணத்துப்பூச்சி

    இல்லாவிட்டாலும் கவலை
    இருந்தாலும் கவலை
    பணம்

    உடல் சுத்தம் நீரால்
    உள்ளத்தின் சுத்தம்
    தியானத்தால்

    மழலைகளிடம்
    மூட நம்பிக்கை விதைப்பு
    மயில் இறகு குட்டி போடும்

    பரவசம் அடைந்தனர்
    பார்க்கும் மனிதர்கள்
    கவலையில் தொட்டி மீன்கள்

    அம்மாவை விட
    மழலைகள் மகிழ்ந்தன
    அம்மாவிற்கு விடுமுறை

    இளமையின் அருமை
    தாமதமாக புரிந்தது
    முதுமையில்

    தோற்றம் மறைவு
    சாமானியர்களுக்குதான்
    சாதனையாளர்களுக்கு இல்லை


    --
    இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
    நன்றி
    அன்புடன்
    கவிஞர் இரா .இரவி

    ReplyDelete
  14. காதல் ஹைக்கூ
    கவிஞர் இரா .இரவி

    அன்றும் இன்றும்
    என்றும் இனிக்கும்
    காதல்

    உணர்ந்தவர்களுக்கு மட்டும்
    புரிந்திடும் உன்னத சுகம்
    காதல்

    கற்காலம் முதல்
    கணிப்பொறி காலம் வரை
    காதல்

    செல்ல வழி உண்டு
    திரும்ப வழி இல்லை
    காதல்

    கண்களில் தொடங்கி
    கண்ணிரில் முடியும்
    சில காதல்

    காவியத்திலும்
    கணினியுகத்திலும்
    இனிக்கும் காதல்

    விழியால் விழுங்குதல்
    இதழால் இணைதல்
    காதல்

    இரசாயண மாற்றம்
    ரசனைக்குரிய மாற்றம்
    காதல்

    விழி ஈர்ப்பு விசை
    எழுப்பும் இனிய இசை
    காதல்

    சிந்தையில் ஒரு மின்னல்
    உருவாக்கும் ஒரு மின்சாரம்
    காதல்

    வானில் மிதக்கலாம்
    உலகை மறக்கலாம்
    காதல்

    பெற்றோரை விட
    பெரிதாகத் தோன்றும்
    காதல்


    --

    ReplyDelete
  15. ஹைக்கூ – கவிஞர் இரா.ரவி

    எலிக்கு எதிரி
    குட்டிக்கு நண்பன்
    பூனையின் பல்…

    எல்லோரும் மகிழ்வாய்
    திருமண வீட்டில்
    தந்தை கடன் கவலையில்…

    கையில் வாங்கினான்
    அருகில் ஈட்டிக்காரன்
    ஊதியம்?…

    முரண்பாடு
    யானைக் கறுப்பு
    பேயரோ வெள்ளைச்சாமி…

    வந்த வழி தெரியாது
    செல்ல வழி கிடையாது
    காதல்…

    முயன்றதால் முடிந்தது
    உழைப்பினால் உருவானது
    குருவிக்கூடு…

    பிறர் சேமிப்பை
    அபகரித்தான் மனிதன்
    தேன்கூடு

    கண்ணால் காண்பதும் பொய்
    தேயும் தேய்வதில்லை
    நிலவு…

    அன்று கண்ணியம்
    இன்று களங்கல்
    கூட்டுறவு வங்கி…

    கொத்தனார் பணி
    அரசியல் பணியானது
    இடிப்பது கட்டுவது

    ReplyDelete
  16. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    மன்னராட்சியையும் வென்றார்கள்
    அரசியல்வாதிகள்
    குடும்ப அரசியிலில்

    மனிதனால் படைக்கப்பட்டு
    மனிதனையேப் படுத்துகின்றது
    பணம்

    எங்கு ?முறையிடுவது
    ஆண் காவலர்களால்
    பெண் காவலர்களுக்குத் தொல்லை

    அவள் தந்த
    சங்கு பயன்பட்டது
    இறுதி ஊர்வலத்திற்கு

    சவுக்குமரம்
    பார்க்கையில்
    அவள் நினைவு

    தமிழைக் காத்ததில்
    பெரும்பங்குப் பெற்றன
    பனை மரங்கள்

    தமிழை அழிப்பதில்
    பெரும்பங்குப் பெற்றன
    தொலைக்காட்சிகள்

    மூடநம்பிக்கையால்
    முற்றுப் பெற்றது
    சேதுகால்வாய்த் திட்டம்

    இடித்ததால்
    இடிந்தது மனிதநேயம்
    பாபர் மசூதி

    எட்டாவது அதிசயம்
    ஊழலற்ற
    அரசியல்வாதி

    மூச்சுக்காற்று வெப்பமானது
    ஏழை முதிர்கன்னிக்கு
    தங்கத்தின் விலையால்

    திரும்புகின்றது
    கற்காலம்
    மின்தடை

    கருவறையில் உயிர்ப்பு
    கல்லறையில் துயில்வு
    இடைப்பட்டதே வாழ்க்கை

    எல்லோரும் சிரிக்க
    அழுது பிறந்தது
    குழந்தை

    எல்லோரும் அழ
    அமைதியாக இருந்தது
    பிணம்

    நடமாடும் நயாகரா
    நடந்துவரும் நந்தவனம்
    என்னவள்

    பெயருக்கு காதலிக்கவில்லை
    பெயரையே காதலித்தேன்
    மலரும் நினைவுகள்

    அதிக வெளிச்சமும்
    ஒருவகையில் இருட்டுத்தான்
    எதுவும் தெரியாது

    கூந்தல் மட்டுமல்ல
    வாயும் நீளம்தான்
    அவளுக்கு

    ReplyDelete
  17. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
    ஆட்சியில் ஆள்பவர்களை விட
    மனதை ஆண்டவர்கள்
    மரித்த பின்னும் வாழ்கின்றனர்

    சிற்பி வீட்டு
    படிக்கல்லானாலும்
    சிலையாவதில்லை

    கோடிகள் கொள்ளை
    அடித்தாலும் முடிவு
    தற்கொலை கொலை

    பொம்மை உடைந்த போது
    மனசும் உடைந்தது
    குழந்தைக்கு

    தடியால் அடித்து
    கனிவதில்லை கனி
    குழந்தைகளும்தான்

    அனைவரும் விரும்புவது
    அதிகாரம் அல்ல
    அன்பு

    நிலம் விற்றுப்
    பெற்றப் பணத்தில்
    அப்பாவின் முகம்

    கால்களைத் தொட்டு
    வணங்கிச் சென்றன
    அலைகள்

    சிற்பி இல்லை
    சிற்பம் உண்டு
    நிலையானது எது ?

    போட்டியில் வென்றது
    புற அழகை
    அக அழகு

    நான் கடவுள் என்பவன்
    மனிதன் அல்ல
    விலங்கு

    அவளுக்கும் உண்டு
    மனசு மதித்திடு
    மனைவி

    ReplyDelete
  18. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    பொன்னகை விட
    பெண்களுக்கு அழகு
    புன்னகை

    வானில் மேகங்கள் எனும்
    சிக்கிமுக்கி கற்களின் உரசல்
    மின்னல்

    மனிதனின்
    முதல் நவீனம்
    மொழி

    வடிவானவள்
    அழகானவள்
    வடிவம்

    காது இல்லாத பாம்பிடம்
    முட்டாள் ஊதுகிறான்
    மகுடி

    அழிவிற்கு
    வழி வகுக்கும்
    ஆயுதம்

    பணக்கரார்களின்
    பாசக்கார நண்பன்
    வைரம்

    இன்றைய மனிதர்கள்
    மறந்துவிட்ட ஒன்று
    தர்மம்

    மனிதனின் பயனுள்ள
    கண்டுபிடிப்பு
    கருவி

    உணர்ச்சி வயப்படாமல்
    அறிவு வயப்பட்டு எடுப்பது
    யுத்தி

    ஏழைகளின் வீட்டிற்கு
    தேவையில்லை பூட்டு
    கதவு

    ReplyDelete
  19. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    மனமெனும் நீதிமன்றத்தில்
    மன சாட்சியே
    நீதிபதி

    ஆசைகளைக் குறைத்தால்
    காணமல் போகும்
    கவலை

    கதை அளப்பவர்களின்
    கட்டுக் கதை
    வாஸ்து

    ஒன்றில் எழுதியது மூன்றில்
    நான்கில் எழுதியது எட்டில்
    ராசிபலன்கள்

    குறை உடலில்
    நிறை மனதில்
    மாற்றுத்திறனாளிகள்

    உயிர்காப்பான்
    தோழன்
    தலைக்கவசம்

    இன்றைய அமைச்சர்
    நாளைய சிறைவாசி
    அரசியல்

    மேல் பார்த்தால் பொறாமை
    கீழ் பார்த்தால் ஆறுதல்
    வாழ்வியல்

    கொலைகாரனையும்
    கொடூரமானவனையும்
    நேசிப்பவள் தாய்

    ஆபாசம் ஊறுகாய் அன்று
    ஆபாசம் சாப்பாடு இன்று
    திரைப்படங்கள்

    கூடியது அன்று
    கூட்டுகின்றனர் இன்று
    கூட்டம்

    வன்முறை போதிக்கும்
    போதி மரங்கள்
    திரைப்படங்கள்

    ஒரே குட்டையில்
    ஊறிய மட்டையில்
    சின்னத்திரை பெரியத்திரை

    பார்த்தீனியமாகத் திரைப்படங்கள்
    குறிஞ்சிமலராக எப்போதாவது
    நல்ல படங்கள்

    உயிருள்ளவரை
    ஒட்டியே இருக்கும்
    பிறந்தமண் நேசம்

    தொடக்கம் பீர்
    முடிவு பிராந்தி வாந்தி
    இளைஞர்கள்

    உளவியல்
    மனம் செம்மையானால்
    வாழ்க்கை செம்மையாகும்

    நினைத்தது நடக்கும்
    நல்லது நினைத்தால்
    நல்லது நடக்கும்




    வேண்டாம் தீபாவளி
    சாகவில்லை நரகாசூரன்
    வாழ்கிறான் இலங்கையில்

    காக்கவில்லை கடவுள்
    சாலை ஓவியரை
    மழை

    விலைவாசி ஏற்றம்
    ஏழைகள் திண்டாட்டம்
    தீபாவளி

    மாளிகைக் குழந்தையை
    ஏக்கத்துடன் பார்த்தது
    குடிசைக் குழந்தை

    சின்னமீன் செலவு
    சுறாமீன் வரவு
    அரசியல்

    ஆசையால் அழிவு
    தூண்டில் புழுவால்
    உயிரிழந்த மீன்

    தோன்றின் புகழோடு
    தோன்றுக
    வானவில்

    ReplyDelete
  20. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    கடை மூடியதால்
    குடி மகன்கள் வருத்தம்
    காந்தி ஜெயந்தி


    அசைவப் பிரியர்களுக்கு வருத்தம்
    ஞாயிறன்று வந்ததால்
    காந்தி ஜெயந்தி

    தேர்வு எழுதியதில்
    ஆள் மாறாட்டம்
    கல்வி அமைச்சர் ?

    காயம் இல்லை
    மரத்தில் இருந்து விழுந்தும்
    இலை

    அரசியல்வாதிகளின்
    கேலிக் கூத்தானது
    உண்ணாவிரதம்

    மரமானதற்கு
    வருந்தியது
    சிலுவை மரம்

    தந்திடுவீர்
    தானத்தில் சிறந்தது
    உடல் தானம்

    அசலை வென்றது
    நகல்
    செயற்கைச் செடி

    உடை வெள்ளை
    உள்ளம் கொள்ளை
    அரசியல்வாதிகள்

    கண்டுபிடியுங்கள்
    வேண்டுகோள்
    விழிகளில் மின்சாரம்

    ReplyDelete
  21. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    கண்களுக்கு விருந்து
    காட்சிப் பெட்டகம்
    இயற்கை

    உழைக்காத மலருக்கு
    வியர்வையா ?
    பனித்துளி

    பூமியிலிருந்து வானம்
    வானத்திலிருந்து பூமி
    தண்ணீர் சுற்றுலா மழை

    உச்சரிப்பைவிட
    உயரந்தது
    மௌனம்

    ஒழியவேண்டும்
    வரங்களுக்கான
    தவம்

    விரல்களின்றித்
    தீண்டியது
    தென்றல்

    உற்றுக்கேளுங்கள்
    பேசும்
    மலர்

    மரமும் கெட்டது
    மனிதனைப் பார்த்து
    கல்லானது

    ஒரு வீட்டில் ஒரு நாளில்
    இத்தனை பாலித்தீன்
    நாட்டில் ?

    யாருக்கு வாக்களிக்க
    தேர்ந்து எடுக்க முடியவில்லை
    குழப்பத்தில் மக்கள்

    ருசிப்பதில் திகட்டலாம்
    ரசிப்பதில் திகட்டுவதில்லை
    அழகு

    கிடைக்காததற்காக ஏங்குவது
    கிடைத்ததை உணராதது
    பலரின் வாழ்க்கை

    கற்பனைதான்
    கல்வெட்டானது
    தேவதை

    ஏழு வண்ணங்களில்
    எண்ணம் கவரும் வில்
    வானவில்

    பிரிந்து
    பின் சந்தித்தால்
    சுவை அதிகம்

    நேற்றைய நவீனம்
    இன்றைய நவீனமன்று
    நாட்டு நடப்பு

    ReplyDelete
  22. காந்தியடிகள் ஹைக்கூ கவிஞர் இரா .இரவி






    அகிம்சையை உணர்த்திய
    அறிவு ஜீவி
    காந்தியடிகள்

    ரகசியம் இல்லாத
    அதிசய மாமனிதர்
    காந்தியடிகள்

    கொண்ட கொள்கையில்
    குன்றென நின்றவர்
    காந்தியடிகள்

    திருக்குறள் வழி
    வாழ்ந்த நல்லவர்
    காந்தியடிகள்

    சுட்ட கொடியவனையும்
    மன்னித்த மாமனிதர்
    காந்தியடிகள்

    உலகம் வியக்கும்
    ஒப்பில்லாத் தலைவர்
    காந்தியடிகள்

    வன்முறை தீர்வன்று
    வையகத்திற்கு உணர்த்தியவர்
    காந்தியடிகள்

    நெஞ்சுரத்தின் சிகரம்
    நேர்மையின் அகரம்
    காந்தியடிகள்

    அரை ஆடை அணிந்த
    பொதுஉடைமைவாதி
    காந்தியடிகள்

    வெள்ளையரின்
    சிம்ம சொப்பனம்
    காந்தியடிகள்

    மனித உரிமைகளின்
    முதல் குரல்
    காந்தியடிகள்

    அமைதியின் சின்னம்
    அடக்கத்தின் திரு உருவம்
    காந்தியடிகள்

    அன்றே உரைத்தவர்
    உலக மயத்தின் தீமையை
    காந்தியடிகள்

    மனிதருள் மாணிக்கம்
    மாமனிதருக்கு இலக்கணம்
    காந்தியடிகள்

    ReplyDelete
  23. மரம் ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    திருமணத்திற்கு வாழை
    மரணத்திற்கு மூங்கில்
    தொடரும் மரத்தின் உறவு

    தொட்டில் முதல்
    சுடுகாடு வரை
    மரம்

    வாழ்ந்தால் நிழல்
    வீழ்ந்தால் விறகு
    மரம்

    வெட்டும் வில்லனுக்கும்
    நிழல் தந்தது
    மரம்

    இயற்கையின் விசித்திரம்
    சிறிய விதை
    பெரிய விருட்சமானது '

    ReplyDelete
  24. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    கோடுகளின்
    கவிதை
    ஓவியம்

    சொற்களின்
    ஓவியம்
    கவிதை

    மதிக்கப்படுவதில்லை
    திறமைகள் இருந்தும்
    குடிகாரர்கள்

    இக்கரைக்கு அக்கரைப் பச்சை
    அரசு ஊழியருக்கு
    வணிகராக ஆசை

    ஊழல் மறைக்க
    ஊழல் செய்யும்
    அரசியல்வாதிகள்

    பழமையானாலும்
    விறகாவதில்லை
    வீணை

    ஜடப் பொருள்தான்
    மீட்டத் தெரியாதவர்களுக்கு
    வீணை

    அம்புகள் படாத வில்
    விழி அம்புகள் அட்ட வில்
    வானவில்

    புகழ் அடையவில்லை
    பிறந்த பூமியில்
    புத்தன்

    ஒருபோதும் மறப்பதில்லை
    உணவு இட்டவர்களை '
    நாய்கள்

    வெடி வெடிப்பதில்லை
    சில கிராமங்களில்
    பறவைப்பாசம்

    மனிதனை விட
    அறிவாளிகள் விலங்குகள்
    சுனாமியில் தப்பித்தன

    அறிவுறுத்த வேண்டி உள்ளது
    மனிதனாக வாழ
    மனிதனை

    அடிக்கரும்பு
    அதிக இனிப்பு
    மண்ணுக்கு அருகில்

    மேய்ப்பன் இன்றியே
    இல்லம் வந்தன
    ஆடுகள்

    நிலத்தில் பிறந்து நீரில் வாழ்ந்து
    நிலத்தில் முடியும்
    படகு

    மனிதனின் கால் பட்டதால்
    களங்கமான
    நிலவு

    ReplyDelete
  25. எய்ட்ஸ் ஹைக்கூ

    கவிஞர் இரா .இரவி

    பண்பாடுப் பயிற்றுவிக்கும்
    பயமுறுத்தல் நோய்
    எய்ட்ஸ்

    ஒழுக்கத்தைப் பொதுவாக்குவோம்
    இருபாலருக்கும்
    வராது எய்ட்ஸ்

    மருந்து இல்லை
    மரணம் உறுதி
    எய்ட்ஸ்

    உயிரை உருக்கும்
    உடலைக் கெடுக்கும்
    எய்ட்ஸ்

    கவனம் தேவை
    குருதி பெறுகையில்
    எய்ட்ஸ்

    எச்சரிக்கை
    ஊசி போடுகையில்
    எய்ட்ஸ்

    வரும் முன் காப்போம்
    உயிர்க் கொல்லிநோய்
    உணர்ந்திடுவோம்

    சபலத்தின் சம்பளம்
    சலனத்தின் தண்டனை
    எய்ட்ஸ்

    சில நிமிட மகிழ்வால்
    பல வருடங்கள் இழப்பு
    எய்ட்ஸ்

    வெறுக்க வேண்டாம்
    நேசிப்போம் நண்பராக
    எய்ட்ஸ் நோயாளிகளை

    --

    ReplyDelete
  26. அணு உலை உயிர்களுக்கு உலை கவிஞர் இரா .இரவி

    நமக்கு நாமே
    வைக்கும் அணுகுண்டு
    அணு உலை

    வராது பூகம்பம் சரி
    வந்தால்
    அணு உலை

    கணிக்க முடியாதது
    இயற்கையின் சீற்றம்
    அணு உலை

    கொலைக்களம் ஆக வேண்டாம்
    கூடங்குளம்
    அணு உலை

    மின்சாரம் காற்றிலும் கிடைக்கும்
    உயிர்கள் போனால் கிடைக்குமா ?
    அணு உலை

    பண நட்டம் பெற்றிடலாம்
    உயிர்கள் நட்டம் ?
    அணு உலை



    மின்சாரம் பெறப் பல வழி
    உயிர்கள் போக வழி
    அணு உலை

    உயிர்கள் அவசியம்
    மின்சாரம் அனாவசியம்
    அணு உலை

    வாழலாம் மின்சாரமின்றி
    வாழமுடியுமா?உயிரின்றி
    அணு உலை

    உயிரா ? மின்சாரமா?
    உயிரே முதன்மை
    அணு உலை

    வராது சுனாமி என்றவர்களே
    வராமலா இருந்தது சுனாமி
    அணு உலை

    உத்திரவாதம் உண்டா ?
    பூகம்பம் வரதா ?
    அணு உலை

    விரும்பவில்லை வெறுக்கின்றனர்
    மனிதாபிமானிகள்
    அணு உலை

    வேண்டும் என்போர்
    வசித்திட வாருங்கள்
    அணு உலை அருகில்

    --

    ReplyDelete
  27. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    உயிர்களை ஊசலாடவிட்டவருக்கு
    பதவி ஊசலாடுகிறது
    சிதம்பர ரகசியம்

    பொதுஉடைமை
    உணர்த்தியது
    செம்பருதி பூ

    தங்கக்கூண்டு வேண்டாம்
    தங்க கூண்டு போதும்
    காதலர்களுக்கு

    இயற்கையின்
    இனிய கொடைகள்
    வண்ணங்கள்

    மூளையின்
    முடங்காத முயற்சி
    எண்ணங்கள்

    இதயத்தை இதமாக்கும்
    கோபத்தைக் குறைக்கும்
    இனிய இசை

    ஈடு இணை இல்லை
    இன்பத்தின் எல்லை
    காதல் உணர்வு

    அளவிற்கு அதிகமானால்
    ஆபத்து
    பணமும் காற்றும்

    யோசிப்பதில்லை பிறரைப்பற்றி
    சந்திக்கும்போது
    பிரிந்த காதலர்கள்

    அன்று பாசத்தால்
    இன்று பணத்தால்
    உறவுகள்

    புலியைக்கண்ட மானாக
    வேட்பாளரைக் கண்ட
    வாக்காளர்
    --

    ReplyDelete
  28. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    கேலிக்கூத்தானது
    அகிம்சையின் ஆயுதம்
    உண்ணாவிரதம்

    எடுபடவில்லை
    மோடியின் மோடி
    மஸ்தான் வேலை

    பிறக்கும் போது இல்லை
    இறக்கும் போது உண்டு
    ஆடை

    யானையின் வாய்
    அரசியல்வாதியின் கை
    சென்றால் திரும்பாது

    இதயம் அல்ல
    மூளைதான்
    காதலியின் இருப்பிடம்

    --

    ReplyDelete
  29. மாற்றுத்திறனாளிகள் கவிஞர் இரா .இரவி

    உடலில் குறை இருந்தாலும்
    உள்ளத்தில் குறைவற்றோர்
    மாற்றுத்திறனாளிகள்

    குறையைக் குறையை
    நினைக்காதவர்கள்
    மாற்றுத்திறனாளிகள்

    வியக்கும் வண்ணம்
    விந்தைகள் புரிவோர்
    மாற்றுத்திறனாளிகள்

    புறப்பார்வை இல்லாவிட்டாலும்
    அகப்பார்வை ஆயிரம் பெற்றவர்கள்
    மாற்றுத்திறனாளிகள்

    உடலுறுப்பை இழந்தபோதும்
    தன்னம்பிக்கை இழக்காதவர்கள்
    மாற்றுத்திறனாளிகள்

    வாய்ப்பு வழங்கினால்
    சிகரம் தொடுபவர்கள்
    மாற்றுத்திறனாளிகள்

    சாதனை புரிவதில்
    சரித்திரம் படைப்பவர்கள்
    மாற்றுத்திறனாளிகள்

    சளைத்தவர்கள் அல்ல
    நிருபித்துக் காட்டுபவர்கள்
    மாற்றுத்திறனாளிகள்

    முயற்சித் திருவினையாக்கும்
    மெய்பித்துக் காட்டுபவர்கள்
    மாற்றுத்திறனாளிகள்

    இல்லை என்ற கவலை
    என்றும் இல்லாதவர்கள்
    மாற்றுத்திறனாளிகள்

    விழிகளை இழந்தபோதும்
    விரல்களை விழிகளாக்கியவர்கள்
    மாற்றுத்திறனாளிகள்

    குரலினைக் கேட்டே
    யார் ?என்று உரைப்பவர்கள்
    மாற்றுத்திறனாளிகள்

    சக மனிதராக நேசியுங்கள்
    சங்கடப்படும்படிப் பார்க்காதீர்கள்
    மாற்றுத்திறனாளிகளை

    --

    ReplyDelete
  30. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    கேலிக்கூத்தானது
    அகிம்சையின் ஆயுதம்
    உண்ணாவிரதம்

    எடுபடவில்லை
    மோடியின்
    மோடிமஸ்தான் வேலை

    காந்தியடிகளை
    அவமானப்படுத்தும்
    மத வெறியர்

    பிறக்கும் போது இல்லை
    இறக்கும் போது உண்டு
    ஆடை

    யானையின் வாய்
    அரசியல்வாதியின் கை
    சென்றால் திரும்பாது

    இதயம் அல்ல
    மூளைதான்
    காதலியின் இருப்பிடம்

    ReplyDelete
  31. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி .

    முட்டாளை அறிவாளியாக்கும்
    அறிவாளியை மேதையாக்கும்
    சுற்றுலா !

    அறிவுறுத்த வேண்டியுள்ளது
    மனிதனாக வாழ
    மனிதனை !

    மண்ணுக்கு அருகில் இருந்ததால்
    அதிக இனிப்பு
    அடிக்கரும்பு !

    மெய்ப்பன் இன்றியே
    இல்லம் வந்தன
    ஆடுகள் !

    களங்கமானது
    மனிதனின் கால் பட்டதால்
    நிலவு !

    வாழ்க்கை முரண்பாடு
    பணக்காரனுக்கு பசி இல்லை
    ஏழைக்கு பசி தொல்லை !

    அறிந்திடுங்கள்
    சோம்பேறிகளின் உளறல்
    முடியாது நடக்காது தெரியாது !

    சாதிக்கின்றனர்
    கைகள் இன்றி
    கைகள் உள்ள நீ !

    வாழ்க்கை இனிக்கும்
    கொடுத்ததை மறந்திடு
    பெற்றதை மறக்காதிரு !

    கவனம் தேவை
    சிக்கல் இல்லை
    சிந்தித்துப் பேசினால் !

    விரல்களால் தெரிந்தது
    விழிகளில் உலகம்
    இணையம் !

    உணர்த்தியது
    பசியின் கொடுமை
    நோன்பு !

    வக்கிரம் வளர்க்கும்
    வஞ்சனைத் தொடர்கள்
    தொலைக்காட்சிகளில் !

    ReplyDelete
  32. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி .

    கற்பனைதான்
    கல்வெட்டானது
    தேவதை !

    கிடைக்காததற்கு ஏங்குவது
    கிடைத்ததை உணராதது
    பலரின் வாழ்க்கை !

    ஏழு வண்ணங்களில்
    எண்ணம் கவரும் வில்
    வானவில் !

    பிரிந்து
    பின் சந்தித்தால்
    சுவை அதிகம் !

    நாட்டு நடப்பு
    நேற்றைய நவீனம்
    இன்றைய நவீனமன்று !

    பெயர் பொறிப்பவர்கள்
    உணருவதில்லை
    மரத்தின் வலி !

    காயம் இல்லை
    மரத்திலிருந்து விழுந்தும்
    இலை !

    மரமானதற்கு
    வருந்தியது
    சிலுவை மரம் !

    தந்திடுவீர்
    தானத்தில் சிறந்தது
    உடல் தானம் !

    அசலை வென்றது
    நகல்
    செயற்கைச் செடி !

    பசிபோக்கும்
    அட்சயப் பாத்திரம்
    அவள் முகம் !

    உணர்த்தியது
    பொதுவுடைமை
    செம்பருத்திப் பூ !

    மூளையின்
    முடங்காத முயற்சி
    எண்ணங்கள் !

    இதயத்தை இதமாக்கும்
    கோபத்தைக் குறைக்கும்
    இனிய இசை !

    ReplyDelete
  33. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி .

    ஆசைப்பட்டது காளான்
    ஆசையை வெறுத்த
    புத்தரின் உயிர் !

    அடைந்தான் பரவசம்
    சுனாமியில் தொலைந்த மகன்
    கண் முன்னே !

    இயற்கையை நேசிக்க
    இதமாகும்
    இதயம் !


    இருக்கட்டும் தூய்மையாக
    இரண்டும்
    அகமும் புறமும் !

    தேவையில்லை
    ஏழைகளின் வீட்டிற்கு
    பூட்டு !

    பெண்களுக்கு அழகு
    பொன்னகையை விட
    புன்னகை !

    வான் மேக
    சிக்கி முக்கி உரசல்
    மின்னல் !

    மனிதனின்
    முதல் நவீனம்
    மொழி !

    முட்டாள்
    மகுடி ஊதுகிறான்
    காதில்லாப் பாம்பிடம் !

    அழிவிற்கு
    வழி வகுக்கும்
    ஆயுதம் !

    உணர்ச்சி வசமின்றி
    அறிவுவசம் எடுப்பது
    உத்தி !

    ReplyDelete
  34. குழந்தை ! கவிஞர் இரா .இரவி .

    உள்ளது உள்ளபடி
    உரைக்கும் காந்தி
    குழந்தை !

    உடைந்தது பொம்மை
    உடைந்தது மனசு
    குழந்தை !

    செல்வங்களில்
    உயர்ந்த செல்வம்
    குழந்தை !

    உலகின் முதல் மொழி
    உன்னதமான மொழி
    குழந்தை !

    குழல் யாழ்
    வென்றது
    குழந்தை !

    கவலை நீக்கும்
    இன்பம் தரும்
    குழந்தை !

    பிழையாகப் பேசினாலும்
    பேசுவதே அழகு
    குழந்தை !

    கருவில் உருவான
    விசித்திர விந்தை
    குழந்தை !

    சாதி மத பேதம்
    அறியாதது
    குழந்தை !

    சிரிப்புக்கு இணையான
    பூ உலகில் இல்லை
    குழந்தை !

    ReplyDelete
  35. மது ! கவிஞர் இரா .இரவி .

    கண்மூடி குடிக்கின்றாய்
    விரைவில் கண் மூடுவாய்
    மது !

    உள்ளே போனதும்
    உன்னை இழப்பாய்
    மது !

    இரண்டும் அழியும்
    பணம் குணம்
    மது !

    இறங்க இறங்க
    இறங்கும் உன் மதிப்பு
    மது !

    குடலை அரிக்கும்
    உடலை வருத்தும்
    மது !

    மனக்கட்டுப்பாடு இருந்தால்
    மனம் நாடாது
    மது !

    மற்றவர்கள்
    து என துப்புவார்கள்
    மது !

    உழைப்பை வீணடிக்கும்
    இறப்பை விரைவாக்கும்
    மது !

    குற்றவாளியாக்கும்
    சிறைக்கும் அனுப்பும்
    மது !

    சூது ஆடுவாய்
    சொத்து இழப்பாய்
    மது !

    மாது வெறுப்பாள்
    துணையை இழப்பாய்
    மது !

    ReplyDelete
  36. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி .

    விடுதலை கேட்டவர்களை
    வீதியில் நிறுத்தியது
    இலங்கை !

    சுதந்திரம் கேட்டவர்களை
    சோகத்தில் ஆழ்த்தியது
    இலங்கை !

    குடும்பங்களைச் சிதைத்து
    கோரத்தாண்டவம் ஆடியது
    இலங்கை !

    தண்ணீர்த் தீவை
    கண்ணீர்த் தீவாக்கியது
    இலங்கை !

    ஆணவத்தின் உச்சம்
    திமிரின் எச்சம்
    இலங்கை !

    மனிதாபிமானம் மறந்து
    விலங்கானது
    இலங்கை !

    தமிழருக்கு வழங்கிய நிதி
    சிங்களருக்குப் பயன்படுத்தும்
    இலங்கை !

    குரங்கின் கையில்
    பூ மாலையாக தமிழர்
    இலங்கை !

    பாலுக்கு பூனை காவல்
    தமிழருக்கு சிங்களர் காவல்
    இலங்கை !

    நாய் வால் என்றும் நிமிராது
    குணம் என்றும் மாறாது
    இலங்கை !

    மன்னிக்க மாட்டார் புத்தர்
    மவ்னிகளான புத்தப்பிச்சுகளை
    இலங்கை !

    வணங்க வேண்டாம் புத்தரை
    புத்தரின் வேண்டுகோள்
    இலங்கை !

    புத்தரின் போதனை மறந்து
    எலும்பு வாங்கி பயனேது
    இலங்கை !

    என்று விடியும்
    ஏக்கத்தில் தமிழர்
    இலங்கை !

    புறத்திற்கு போடலாம் முள்வேலி
    அகத்திற்கு ?
    இலங்கை !

    ரத்த வெறியனுக்கு
    ரத்தினக் கம்பளம்
    இந்தியா !

    ReplyDelete
  37. எழுத்து ! கவிஞர் இரா .இரவி .



    அறிந்தது மனதில் நின்றது
    அறியாதது அறிய வைத்தது
    எழுத்து !
    -------------------------------------
    மனிதனின் வளர்ச்சிக்கும்
    சாதனைக்கும் காரணம்
    எழுத்து !
    ------------------------------------
    இல்லாத உலகம்
    நினைக்கவே அச்சம் !
    எழுத்து !
    -------------------------------------------
    திருவள்ளுவரை
    உலகிற்குக் காட்டியது
    எழுத்து !
    ---------------------------------
    அறிஞர்கள் கவிஞர்கள்
    எழுத்தாளர்கள் மூலப் பொருள்
    எழுத்து !
    ------------------------------------------------------------------------------------------
    ஒலி வடிவம் வரி வடிவமானது
    நாகரீகத்தின் தொடக்கம் மொழியின் உச்சம்
    எழுத்து !
    ----------------------------------------------
    தோன்றாமல் இருந்திருந்தால்
    ஆதிவாசியாகவே இருந்திருப்பான்
    எழுத்து !
    ---------------------------------------------
    அறிவு வளரவும் ஆள் வளரவும்
    உதவியது
    எழுத்து !
    ------------------------------------------
    பார்வையற்றவர்களும்
    தடவி உணரும் உன்னதம்
    எழுத்து !
    ------------------------------------------
    ஆற்றலையும் வீரத்தையும்
    பறை சாற்றியது கல்வெட்டு
    எழுத்து !
    -----------------------------------------
    காவியம் காப்பியம்
    காத்தது ஓலைச்சுவடி
    எழுத்து !
    ------------------------------------------

    ReplyDelete
  38. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    பறிக்குது மனம்
    நீல வானம்
    நிலா வானம் !

    பெறுவது அவலம் அன்று
    திருவிழா இன்று
    கடன் மேளா ?

    லஞ்சம் தவிர்
    நெஞ்சம் நிமிர்
    வாசகத்திற்குக் கீழ் லஞ்சம் !

    ஆறடி கூட
    புதைக்கப்பட்டவனுக்கே
    எரிக்கப்பட்டவனுக்கு ?

    குணம் மாறி இருப்பான்
    இன்று இருந்திருந்தால்
    கர்ணன் !

    வலை கட்டிக்
    காத்திருந்தது பூச்சிக்காக
    சிலந்தி !

    தேவையற்றதை நீக்கிட
    கிடைத்தது
    சிலை !

    நினைவிற்கு வந்தது
    பரமபத பாம்புகள்
    அரசியல்வாதிகள் !

    வாழ்கிறார்கள்
    மக்கள்
    மனிதர்கள் ?

    ஏவி என்ன பெருமை
    ஏவுகணை நூறு
    ஊழல் !

    அமைதி நிலவியது
    குடியும் கொடியும்
    இல்லா கிராமம் !

    விழுங்கி விட்டன
    செல்பேசி கோபுரங்கள்
    குருவிகள் !

    ஒழுங்குபடுத்தப்பட்ட
    ஓசை
    இசை !

    ReplyDelete
  39. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    மருந்தளித்தார் மனிதநேயத்தோடு
    மலையாள நடிகர்
    தமிழக நடிகர்கள் ?

    எந்த விலை ஏறியபோதும் வருந்தாதவன்
    மது விலை ஏறியதும் வருந்தினான்
    குடிமகன் !

    நேர்மையின் சின்னம்
    திருவாளர் பரிசுத்தம்
    சொத்து பத்து கோடி !

    கடவுச்சீட்டு இன்றி
    பல நாடு பயணம்
    உரத்த நாடு ! வருசை நாடு !

    சகல சக்தியோடு அவாள்
    குடியரசுத்தலைவரை
    ஆசிர்வதிக்கும் அவாள் !


    மழைக்கான
    மேளமும் விளக்கும்
    இடி மின்னல் !

    ரசிப்பதும் சுகம்
    நனைவதும் சுகம்
    மழை !

    ஒவ்வொரு நாளும்
    ஒவ்வொரு மாதிரி
    நிலவும் அவளும் !

    நிலவு
    உருட்டிய சோளிகள்
    நட்சத்திரங்கள் !

    மழைக்கான
    பச்சைக் கொடி
    பசுமை !

    ReplyDelete
  40. பிடிவாதம் ! கவிஞர் இரா .இரவி .

    வாதம் செய்வது திறமை !
    பிடிவாதம் செய்வது மடமை !
    ------------------------------------------------------
    கை கால்களை
    முடக்கும் வாதம் !
    மூளையை முடக்கும்
    பிடிவாதம் !
    ------------------------------------------------------
    வாதத்தை விட கொடிய நோய்
    வேண்டாம் பிடிவாதம் !
    -----------------------------------------------------
    பெரிய மனிதர்களின்
    வீழ்ச்சிக்கு காரணம்
    பிடிவாதம் !
    ---------------------------------------------------------
    விட்டுக் கொடுத்தால்
    வாழ்க்கை சிறக்கும் !
    பிடிவாதம் ! வாழ்வை அழிக்கும் !

    ReplyDelete
  41. கொடிது ! கொடிது ! தீ கொடிது ! கவிஞர் இரா .இரவி .

    வாழ வேண்டிய உயிர்களைக் குடிக்கும்
    வஞ்சனை மிக்க தீ கொடிது !

    தீபாவளி நெருங்குவதால் விரைந்து முடிக்க
    முதலாளி நெருக்கியதால் வந்த விபத்து !

    தீபாவளி வெடி தயாரித்த தொழிலாளிகளே
    தீபாவளி வெடியாகி வெடித்து விட்டார்கள் !

    விதிகளைக் கடைபிடிக்காமல் முதலாளிகள்
    விதிகளை மீறியதால் வந்த கொடிய விபத்து !

    அளவிற்கு அதிகமான ரசாயனம் இருப்பு
    அதிகமானோரின் உயிர்கள் பறிப்பு !

    தீயை வேடிக்கைப் பார்த்தவர்களும் மரணம்
    தீயிலிருந்து காக்கச் சென்றவர்களும் மரணம் !

    பெருமையாக சிவகாசி குட்டி ஜப்பான் என்கின்றோம்
    பெரிய அளவில் மருத்துமனைகள் இல்லை !

    மிகப்பெரிய மருத்துவ மனையை சிவகாசியில்
    முதலில் கட்டுவதற்கு ஆவன செய்யுங்கள் !

    கவனம் கவனம் உயிர்கள் பதனம்
    கவனக் குறைவால் உயிர்கள் இழப்பு !

    இழந்த உயிர்கள் போதும் ! போதும் !
    இனிஒரு உயிர் கூட இழக்கக் கூடாது !

    இறந்தவர்கள் அனைவருமே வாழ வேண்டிய
    இளம் வயதினர்கள்தான் முடிந்தது கதை !

    எத்தனை லட்சங்கள் கொடுத்தாலும்
    இழந்த உயிருக்கு ஈடாகுமா?

    அப்பாவை இழந்து அழுகுது குழந்தை !
    அம்மாவை இழந்து வருந்துது குழந்தை !

    அவர்கள் உயிர்களைப் பணயம் வைத்து
    உங்களுக்கு தரும் வெடிகள் தேவையா ?

    உங்கள் மகிழ்ச்சிக்காக வெடி தயாரித்தவர்கள்
    அவர்களின் உயிர்களை இழந்து விட்டனர் !

    வெடி தேவைதானா ? சிறிது சிந்தியுங்கள் !
    வெடி வெடிக்காமல் இருங்கள் இந்த வருடம் !



    --

    ReplyDelete
  42. விடுதலை ! கவிஞர் இரா .இரவி !

    வணிகம் செய்ய வந்தவன் வெள்ளையன் நம் நாட்டை
    வசப்படுத்தி அடிமையாக்கிக் கொள்ளை அடித்தான் !

    இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம்
    என்று மக்களைக் கொடுமைப் படுத்தினான் !

    விடுதலை வேண்டிப் போராடினார்கள் அன்று
    வியர்வையும் ரத்தமும் சிந்திப் போராடினார்கள்!

    வீரபாண்டிய கட்டபொம்மன் விடுதலைக்காக
    வீரத்துடன் போராடி வீர மரணம் அடைந்தான் !

    வேலுமங்கை வீர நாச்சியார் வெள்ளையரோடு
    வேங்கையென பாய்ந்து வீரப் போர் புரிந்தார் !

    குயிலி வெடிமருந்துக் கிடங்கில் தீயுடன் குதித்து
    குவலயத்தின் முதல் தற்கொலைப் படையானாள் !

    தடியடி பெற்றனர் சிறைக்குச் சென்றனர்
    தள்ளாத வயதிலும் போராட்டம் நடத்தினர் !

    கடலில் கிடைக்கும் உப்புக்கு வரி விதித்தான்
    காந்தியடிகள் தண்டி யாத்திரை நடத்தினார் !

    அயல்நாட்டுத் துணிகளை மக்கள் புறக்கணிக்க
    அண்ணல் காந்தியடிகள் மக்களிடம் வேண்டினார் !

    பொது இடத்தில் குவித்து வைத்து தீ இட்டனர்
    பொது மக்களும் வேண்டுகோளை நிறைவேற்றினர் !

    கொடியைக் காத்து உயிரை விட்ட திருப்பூர்
    குமரன் மக்கள் மனதில் இடம் பிடித்தான் !

    செக்கை இழுத்து சிறையில் வாடி வதங்கிய
    செந்தமிழர் வ .உ .சி நெஞ்சமெல்லாம் நிறைந்தார் !


    நேதாசி சுபாசு சந்திரா போசு அவர்கள்
    நாளும் படை திரட்டி ஆயுத வழி போராடினார் !

    அமைதிவழி ஆயுதவழி இரு வழியிலும்
    ஆங்காங்கே போராட்டம் புயலானது !

    வேறு வழியின்றி வெள்ளையன்
    விடுதலை வழங்கிச் சென்றான் !

    இங்கிலாந்துக்காரன் மட்டுமே ஆண்டான் அன்று
    எல்லா நாட்டுக்காரனும் ஆளுகிறான் இன்று !

    உலகமயம் என்ற பெயரில் நம் நாட்டை
    உலகமே கொள்ளை அடித்து மகிழ்கின்றது !

    இன்னுமொரு விடுதலைப் போராட்டம்
    இளைஞர்கள் தொடங்கும் நாள் வரும் !

    ReplyDelete
  43. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

    வாடிவாசல் அன்று
    நெடுவாசல் இன்று
    நாளை ?
    -------------------------------
    வாடிவாசல்
    நெடுவாசல்
    வாசல் தோறும் வேதனை !
    -------------------------------------------------
    மண் காக்க
    மண்ணின் மைந்தர்கள்
    போராட்டம் !
    ---------------------------------------
    வாடிவாசல் வெற்றி மக்களுக்கே
    நெடுவாசலும் வெற்றி மக்களுக்கே
    உடன் அறிவித்தால் மதிப்பு மிஞ்சும் !
    ------------------------------------

    புதுக்கோட்டையில் பூத்தது
    புதிய போராட்டம் இன்று
    வெற்றி நாளை !

    ReplyDelete
  44. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


    சேற்றில் மிதந்தும்
    அழுக்காகவில்லை
    நிலவு !

    களவும் கற்று மற அன்று
    களவும் அற்று
    மற !

    சேற்றில் மலர்ந்தும்
    ஒட்டவில்லை சேறு
    செந்தாமரை !

    பணம் சேர்ப்பு
    இல்லாத பேய்
    இருப்பதாகக் காட்டி !
    .
    அழிந்தது
    நேர்மை
    அரசியல் !

    முடிக்கலாம் அதிகவேலை
    அதிகாலை எழுந்தால்
    சாதிக்கலாம் !

    அன்பே சிவம்
    சிவன் கரத்தில்
    சூலாயுதம் !

    காண்பதும் பொய்
    சுற்றுவதாகத் தோன்றும்
    சுற்றாத சூரியன் !

    ReplyDelete
  45. காதலர் தினம் ! கவிஞர் இரா .இரவி !

    காதலர்தினம் மட்டும் நினைப்பது
    காதலே அன்று !

    வருடத்தில் ஒரு நாள்
    நினைப்பதல்ல காதல் !

    வாழ்நாள் முழுவதும்
    நினைப்பதே காதல் !

    காதலித்த நாள் முதலாய்
    உயிருள்ளவரை நினைப்பதே
    காதல் !

    எண்ணம் முழுவதும்
    இனிதே நிரம்பி இருப்பதே
    காதல் !

    அன்பு செலுத்துவதில்
    இருவருக்கும் போட்டி நடப்பதே
    காதல் !

    ஒருவரை ஒருவர் யாரிடமும்
    விட்டுக் கொடுக்காததே
    காதல் !

    இன்பம் துன்பம் இரண்டிலும்
    இணைந்தே இருப்பதே
    காதல் !

    பிரித்தாளும் சூழ்ச்சிக்கு
    பலியாகாமல் இருப்பதே
    காதல் !

    ஒருவருக்கு ஒருவர்
    அசைக்கமுடியாத நம்பிக்கையே
    காதல் !

    புற அழகால் வருவதல்ல
    அக அழகால் வருவதே
    காதல் !

    ReplyDelete
  46. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


    படைத்தனர் மாணவர்கள்
    புதிய வரலாறு
    ஜல்லிக்கட்டு தடை தகர்த்து !

    தடை அதை உடை
    உடைந்தது தடை
    காளைகளின் வெற்றி !

    பொன் எழுத்துக்களால்
    பொறிக்க வேண்டியது
    மாணவர்கள் வெற்றி !

    தமிழன் என்று சொல்லடா
    தலை நிமிர்ந்து நில்லடா
    வாடிவாசல் வென்றதடா !

    வேண்டாம்
    கஞ்சத்தனம்
    பாராட்டில் !

    மகானாக வேண்டாம்
    மனிதனால் போதும்
    மனசாட்சிப்படி நட !

    முடியும் என்று
    முதலில் நினை
    முடியும் !

    முடியுமா என்ற
    சந்தேகம்
    தோல்வியில் முடியும் !

    கவலையை மற
    கவலையால் தீராது
    கவலை !

    நாளை என்று
    நாளைக் கடத்தாதே
    இன்றே முடி !

    செய்ததை மற
    பெற்றதை மறக்காதே
    உதவி !

    ReplyDelete
  47. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

    உலகமே உற்று நோக்கியது
    தமிழர்களின் போராட்டம்
    கனவு நனவாகியது !


    தலைவன் இல்லாத
    போராட்டம் அல்ல
    தமிழே தலைவன் !


    சென்னையின் சாலைகள் யாவும்
    மெரீனாவை நோக்கி
    மிரண்டது இந்தியா !


    பொறுத்தது போதும்
    பொங்கினான் தமிழன்
    புரிந்தது இந்தியாவிற்கு !


    ஐம்பது பேரில் தொடங்கி
    லட்சத்தைத் தாண்டியது
    லட்சியம் வென்றது !

    சென்னை மட்டுமல்ல
    தமிழகமே பொங்கியது
    புரிந்தது ஆற்றல் !

    உலகத்தமிழர் யாவரும்
    உணர்வை உணர்த்தினர்
    தமிழன்டா !

    வெற்றி ! வெற்றி !
    மாணவர்கள் போராட்டம்
    வெற்றி !

    ReplyDelete
  48. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

    பொங்கலுக்குள் அனுமதித்து இருந்தால்
    பொங்கி இருக்க மாட்டார்கள்
    மாணவர்கள் !

    உச்ச நீதிமன்றம்
    உச்சம் இழந்தது
    அவமானமே மிச்சம் !

    மக்கள் எழுச்சியால்
    மண்டியிட்டது
    பீட்டா !

    அயல்நாட்டுக் குளிர்பானம்
    விரட்ட உதவிய
    பீட்டாவிற்கு நன்றி !

    இப்படை போதுமா
    இன்னும் கொஞ்சம் வேணுமா
    மிரட்சியில் அரசியல்வாதிகள் !

    ஏறு தழுவுதல் என்பதை
    மிருகவதை என்போர்
    மூடர் கூட்டம் !

    ஆட்டம் கண்டது
    ஓட்டம் எடுத்து
    பீட்டா !

    ReplyDelete
  49. மாமனிதர் எம் .ஜி .ஆர் .! கவிஞர் இரா .இரவி !

    நூற்றாண்டு கடந்தும் இன்றும் நினைக்கப்படுகிறார்
    நாடே கொண்டாடி மகிழ்கின்றது எம் .ஜி .ஆரை !

    ஏழ்மையில் பிறந்து வளர்ந்த காரணத்தால்
    ஏழ்மை ஒழிக்க முயற்சிகள் செய்தார் !

    கொடுத்துக் கொடுத்து சிவந்த கரங்கள்
    கண்ணால் கண்ட காட்சிகள் ஆனது !

    தோன்றின் புகழோடு தோன்றுக என்று
    திருக்குறளுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் !

    மனிதநேயத்தின் சின்னமாக வாழ்ந்து சிறந்தவர்
    மக்கள் மனங்களில் என்றும் வாழ்பவர் !

    நல்லவனாகத் திரைப்படத்தில் நடித்தது மட்டுமன்றி
    நல்லவனாகவே வாழ்க்கையில் வாழ்ந்து காட்டியவர் !

    ஈழத்தமிழரின் விடுதலையை பெரிதும் விரும்பியவர்
    ஈழத்தின் விடுதலைக்கு பெரிதும் உதவியவர் !

    ஏழைப்பங்காளன் காமராசரின் மத்திய உணவுத்திட்டத்தை
    ஏழைமாணவர் அனைவருக்கும் சத்துணவாக விரிவாக்கியவர் !

    வெற்றி மாலைகள் பெற்றுக் குவித்தவர்
    வேதனைகள் நீக்கி மகிழ்வைத் தந்தவர் !

    என்னுடைய முதல்வர் நாற்காலியில் ஒருகால்
    என்பது பட்டுக்கோட்டையின் பாடல்கள் என்றவர் !

    நன்றி மறக்காத உயர்ந்த உள்ளம் பெற்றவர்
    நாடு போற்றும் பொன்மனச் செம்மல் ஆனவர் !

    பொற்காலம் படைத்தது தமிழா வரலாற்றின்
    பொன் எழுத்துக்களில் இடம் பிடித்தவர் !

    விருதுகள் பல பெற்றபோதும் என்றும்
    விவேகமாகச் சிந்தித்து எளிமையாய் வாழ்ந்தவர் !

    ஏழைகளின் கண்ணீர் துடைக்க முதல்வராகி
    எண்ணிலடங்காத திட்டங்களை நிறைவேற்றியவர் !

    திரைப்படத்தில் மிகமிக நன்றாக நடித்தவர்
    தமிழக மக்களிடம் என்றும் நடிக்காதவர் !

    புன்னகை மன்னராக பூவுலகில் வாழ்ந்தவர்
    புரட்சித் தலைவர் எனும் பட்டம் பெற்றவர் !

    இன்னும் பல நூற்றாண்டுகள் வாழ்வார் எம் .ஜி .ஆர் .
    என்றும் அழிவில்லை எம் .ஜி .ஆர் . புகழுக்கு !

    ReplyDelete
  50. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !



    நடிப்பில் வென்றனர்
    நடிகர் திலகத்தை
    அரசியல்வாதிகள் !

    வந்தார்
    நேர்மையான அரசியல்வாதி
    கண்டது கனவு !

    பேசினார் பொதுநலம்
    அருகில்
    தேர்தல் !

    மனிதனாகச் சாதிக்க
    விலக்கு
    மது !

    கேளிக்கை அல்ல
    கேடிகளுக்கானது
    மது !

    மகிழ்ச்சி என்று தொடங்கி
    துன்பத்தில் முடியும்
    மது !

    வன்முறை வளர்க்கும்
    நட்பை அழிக்கும்
    மது !

    வாரம் ஒரு நாள் தொடக்கம்
    தினமும் என்றாகும்
    மது !

    ஓசியில் தொடங்கி
    திருட்டில் முடியும்
    மது !

    வெறும் வாசகமல்ல
    முற்றிலும் உண்மை
    குடி குடி கெடுக்கும் !

    போராடித் தோற்றன
    மரங்கள்
    புயல் !

    வளமான
    மனிதாபிமானம்
    ஏழை வீட்டில் !

    உணரவில்லை
    தன் பலம்
    பிச்சையெடுக்கும் யானை !

    மரம் விட்டு உதிர்ந்த
    கவலையால்
    இலை சருகானது !

    பார்வையாளர் கூடிட
    போய் பேசுகின்றன
    தொலைக்காட்சிகள் !
    .

    ReplyDelete
  51. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

    அன்று தொண்டு
    இன்று துட்டு
    அரசியல் !

    மாறின கால்கள்
    மாறவில்லை விழுபவர்கள்
    அரசியல் !

    காற்றில் பறந்தன
    சுயமரியாதைக் கொள்கை
    அரசியல் !

    கொள்கையானது
    குறுக்குவழி கொள்ளையடிப்பு
    அரசியல் !

    அழிந்து நாளானது
    நம்பிக்கை நாணயம்
    அரசியல் !

    அன்று மக்களுக்காக
    இன்று தன் மக்களுக்காக
    அரசியல் !

    வழக்கொழிந்து விட்டன
    நீதி நேர்மை
    அரசியல் !

    நம்பிக்கைத் துரோகம்
    நாளும் அரங்கேற்றம்
    அரசியல் !

    நாற்றம்
    தோற்றது கூவம்
    அரசியல் !

    முழுவதும் களையானால்
    களையெடுப்பது எங்ஙனம்
    அரசியல் !

    ஏணியில் உயர்ந்து
    பாம்பு கடித்து கீழே
    பரமபத அரசியல் !
    .

    ReplyDelete
  52. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

    கழிவறை சுத்தம் செய்வதை
    குடித்து மகிழும் அவலம்
    குளிர்பானம் !

    தண்ணீருக்குப் பதிலாக
    அருந்திடும் கொடுமை
    குளிர்பானம் !

    நடிகர் விளம்பரத்தில் ஒரு முறை
    நாம் பலமுறை குடிக்கிறோம்
    குளிர்பானம் !

    இரண்டு நாள் போட்டால்
    பல்லையும் கரைக்கும்
    குளிர்பானம் !

    அயல்நாட்டில் தடை
    நம்நாட்டில் தாராளம்
    குளிர்பானம் !

    விலை கொடுத்து வாங்குகிறோம்
    உடல் நலம் கெடுக்கும்
    குளிர்பானம் !

    வழங்காதீர் விழாக்களில்
    விருந்தினருக்குத் துன்பம்
    குளிர்பானம் !

    நவீனம் என்ற பெயரில்
    நலம் கெடுக்கும்
    குளிர்பானம் !

    இயற்கை நன்மை
    செயற்கை தீமை
    குளிர்பானம் !

    பழரசம் என்பர்
    பழரசம் அன்று
    குளிர்பானம் !

    திருந்துவது என்றோ ?
    வாங்கவில்லை நல்ல இளநீர்
    வாங்குகின்றோம் கொடிய குளிர்பானம் !

    ReplyDelete
  53. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

    தியான முயற்சியில்
    வந்தது
    தூக்கம் !

    கவனி மூச்சை
    நீளும்
    மூச்சு !

    சாய்ந்தன
    மரங்கள்
    வெப்பமயம் !

    வேகம்
    விவேகமென்று
    உணர்த்தியது புயல் !

    அழிக்க மனமில்லை
    அலைபேசி எண்
    இறந்த நண்பன் !

    நேற்று மழை
    இன்று புயல்
    நாளை ?

    வழிவகுக்கும்
    அழிவிற்கு
    இயற்கையின் சீற்றம் !


    வீழ்ந்தன மரங்கள்
    விழவில்லை நாணல்
    இயற்கையின் விந்தை !

    முதலில் வரம்
    பிறகு தவம்
    நம்பாத பக்தன் !

    போனது பெயர்
    பிரபல மருத்துவமனை
    பிரபலம் மருத்துவத்தால் !

    நாடியை வைத்து அன்று
    சொத்தை வைத்து இன்று
    மருத்துவம் !

    நம்பிக்கையில்லாத தீர்மானம்
    அறத்தின் மீது
    அநீதியின் வெற்றி !

    இறுதியில் வெல்லும் சரி
    இடையில் என் தோற்கிறது
    தர்மம் !

    கெட்டவர்கள் பெருகி
    நல்லவர்கள் குறைவது
    நாட்டு நடப்பானது !

    படிக்காமலே
    பாடியது
    சிள் வண்டு !

    இருப்பை உணர்த்தி
    இரையானது பாம்புக்கு
    தவளை !

    ReplyDelete
  54. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !



    சீர் இழந்தது
    சிங்காரச் சென்னை
    வார்தா வந்ததால் !

    ReplyDelete
  55. என்றும் வாழ்வான் பாரதி ! கவிஞர் இரா .இரவி !

    வான்புகழ் வள்ளுவருக்கு அடுத்து
    வந்த கவிஞர்களில் வான்புகழ் பெற்றவன் !

    கவியரசர் என்பதனால் அவன் சந்தித்த
    புவியரசனிடமும் நூல்களையேப் பெற்றவன் !

    சிட்டுக்குருவிகளை உள்ளபடியே நேசித்தவன்
    விட்டு விடுதலையாகிக் கவிகள் வடித்தவன் !

    எட்டயபுரம் என்ற ஊரில் பிறந்து அவன்
    எட்டாத உயரம் பாடலால் தொட்டவன் !

    முறுக்கு மீசைக்காரன் மட்டுமல்ல அவன்
    முண்டாசுக் கட்டிய முத்தமிழ் வேந்தன் !

    எளிய தமிழில் இனிய கவி யாத்தவன்
    எல்லோருக்கும் புரியும்படி எழுதியவன் !

    முப்பத்தியொன்பது ஆண்டுகள்தான் அவன்
    மூச்சு இருந்தது இன்று வரை பேச்சு உள்ளது !

    கனகசுப்பு ரத்தினத்தின் குருவாகியவன்
    கவி பாரதி தாசனை உருவாக்கியவன் !

    பன்மொழிகள் அறிந்திருந்த காரணத்தால் அவன்
    பைந்தமிழன் சிறப்பை செழிப்பை உணர்த்தியவன் !


    பாரதி பாடிய பாடல்கள் யாவும் என்றும்
    பா ரதியாக அழகிய பாடல்கள் ஆனது !

    திருவல்லிக் கேணியில் வாழ்ந்து சிறந்தவன்
    செந்தமிழ்க் கேணியாக இருந்து வென்றவன் !

    விடுதலை உணர்வை பாட்டால் விதைத்தவன்
    விடுதலை அடைந்துவிட்டதாகப் பாடியவன் !

    பெண் விடுதலைக்கு பாடல்கள் செய்தவன்
    பெண்இன உயர்வுக்கு ஏணியானவன் !

    அச்சமில்லை என்று பாடிய வீரமகன்
    அன்பாய் குழந்தைப் பாட்டும் பாடியவன் !

    நூற்றாண்டு கடந்தும் இன்றும் வாழ்பவன்
    நூற்றாண்டு பல ஆனாலும் என்றும் வாழ்வான் !

    ReplyDelete
  56. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

    பார்க்க அழகு
    பயன் இல்லை
    போலிப்பனைமரம் !

    வளைக்கலாம்
    இரும்பையும்
    நெருப்பிலிட்டால் !

    தேவைப்படுகிறது
    கணக்குப்பொறி
    படித்தவர்களுக்கு !

    வஞ்சகம்
    வருங்கால வாரிசுகளுக்கு
    நெகிழி !

    வைத்தவர் இல்லை
    வழங்கியது பலன்
    மரம் !

    கணக்கில் அடங்காது
    வண்ணங்களின் எண்ணிக்கை
    மலர்கள் !

    உழைத்தவர்கள் கவலையில்
    உழைக்காதவர்கள் மகிழ்வில்
    மாறுவது என்றோ ?

    ReplyDelete
  57. இன்குலாப் ! கவிஞர் இரா .இரவி !


    அதிகம் படைக்கவில்லை என்றாலும்
    அழுத்தமாகப் படைத்தவன்
    இன்குலாப் !

    யார் கவிஞன் என்றால்
    நீயே கவிஞன் என்றானவன்
    இன்குலாப் !

    பாரதி போலவே
    எழுதியது போல வாழ்ந்தவன்
    இன்குலாப் !

    அஞ்சாமையின் குறியீடு நீ
    சமரசம் செய்யாத கொள்கையாளன் நீ
    இன்குலாப் !

    ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்குரலில்
    என்றும் ஒலிக்கும் உன்கவிதைகள்
    இன்குலாப் !

    மறைவு உன் உடலுக்குத்தான்
    மறைவு இல்லை உன் கவிதைகளுக்கு
    இன்குலாப் !

    ஈழத்தமிழருக்காக மனிதாபிமானக்
    கவிதைகள் யாத்தவன்
    இன்குலாப் !

    ஆதிக்கம் எந்த வடிவில் வந்தாலும்
    அதனை கவிதை வடிவில் எதிர்த்தவன்
    இன்குலாப் !


    யாருக்கும் துதி பாடாதவன் நீ
    அதனால் உன் துதி பாடுகின்றேன்
    இன்குலாப் !

    ReplyDelete
  58. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

    படிக்காமலே ஆசிரியரானது
    குழந்தை
    விளையாட்டில் !

    தட்டிக் கொடுத்து
    தூங்க வைத்தது குழந்தை
    பொம்மையை !

    குழந்தை இல்லாத வீடு
    நிறைந்து இருந்தன
    பொம்மைகள் !

    வருந்தினேன்
    பார்த்தபோது
    பல்லியின் வாயில் பூச்சி !

    நிறுத்தியது கத்துவதை
    பாம்பின் வாயில்
    தவளை !

    முடிவுக்கு வந்தது
    மீன் வளர்க்கும் ஆசை
    ஒவ்வொன்றாய் இறந்தன !

    குளத்தில் உள்ள நிலவை
    கடித்துத் தோற்றன
    மீன்கள் !

    சின்ன மீனை உண்ட பெரிய மீனை
    உண்டான்
    மனிதன் !

    புழு வைத்து மீன் பிடித்து
    உண்ட மனிதன் மாண்டதும்
    உண்டது புழு !

    சிலந்தி வலை
    விழுந்தது பூச்சி
    மகிழ்வில் சிலந்தி !

    மனமில்லை
    மழை ரசிக்க
    பசி !

    கறுப்புப்பணம் ஒழிப்பதாகச் சொல்லி
    ஒழித்தனர் வெள்ளைமன
    மனிதர்களின் வாழ்வை !

    அன்பே சிவம்
    கையில்
    சூலாயுதம் !

    போய் சொன்ன வாயுக்கு
    போசனம் கிடைத்தது
    சோதிடர் !

    எல்லை தாண்டி
    கண்டிப்பதாகக் கடிந்தனர்
    இளையோர் !

    நனையவில்லை மழையில்
    மேகத்துக்கு மேல் !
    பறந்த பறவை

    நகரும் மரங்கள்
    உண்மையில்லை
    தொடர்வண்டிப் பயணம் !

    சிறிதாகவே தெரியும்
    காணும் யாவும்
    உச்சத்தில் இருந்தால் !

    சுருக்கச் சுருக்க
    பொருள் விரியும்
    ஹைக்கூ !

    ReplyDelete
  59. ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

    கவலை இல்லை
    பாராட்டைப் பற்றி
    குயில் !

    வருத்தமில்லை
    கருமை பற்றி
    காகம் !

    கர்வம் இல்லை
    வெண்மை பற்றி
    புறா !

    விடிந்து வெகுநேரமாகி
    கூவியது
    சோம்பேறி சேவல் !

    வானில் வட்டமிடும்
    பருந்து
    பயத்தில் குஞ்சுகள் !

    வெட்ட வெட்ட
    உயர்ந்தது
    தென்னை !

    அறிந்ததில்லை
    இளநீரின் சுவை
    தென்னை !

    இரண்டையும் காணலாம்
    என்றாவது ஒருநாள்
    சூரியன் சந்திரன் !

    மீண்டும் துளிர்த்தது
    பட்டமரம்
    மழை !

    வகைகள் எத்தனை
    வரையறுக்க முடியாது
    மலர்கள் !

    ரொட்டி
    யார் போட்டாலும்
    வாலாட்டும் நாய் !

    குறைக்கும் நாய்
    கடிக்காது பொய்
    கடிக்கும் !

    திரைகடல் ஓடி
    திரவியம் தேடினால்
    சுடுகிறான் சிங்களன் !

    வேற்றுமையில் ஒற்றுமை
    இந்தியா மட்டுமல்ல
    இணைகளும்தான் !

    உள்ளே அனுமதி இல்லை
    மதிப்பு உண்டு
    காலணி !

    வேண்டாம்
    சூடம்
    சுற்றுச்சூழல் மாசு !

    பெயருக்கு இல்லாமல்
    காரணப் பெயராகட்டும்
    அறங்காவலர் !

    அறம் செய்ய
    விரும்பினால் போதாது
    செய்க அறம் !

    சொல் செயல் சிந்தனை
    அறம் இருந்தால்
    சிறக்கும் வாழ்க்கை !

    குப்பை கூட
    நிலத்திற்கு உரமாகும்
    மனிதன் ?

    மக்காத மக்கும் குப்பை
    வேறுபாடு தெரியாத
    மக்காக மக்கள் !

    நோயின்றி
    நலமாக வாழ
    நடைப்பயிற்சி !
    .
    உலகில் யாருமில்லை
    எல்லாம் பொருந்திய
    இணை !

    சாதியில் இல்லை
    எண்ணத்தில் உள்ளது
    உயர்வு தாழ்வு !

    விட்டுக்கொடுங்கள்
    ஒழியும் வன்முறை
    நிலவும் அமைதி !

    உடைத்தே போடுகின்றனர்
    நடுத்தர மக்கள்
    முந்திரி !

    கடைசித் திருமணம்
    உணர்த்தியது
    கடலைமிட்டாய் !

    உடைந்து இருந்தால் கோபம்
    உடைத்து உண்ணும்
    அப்பளம் !

    பெண்ணிற்கு மட்டும்
    கற்பிக்கப்பட்ட கற்பனை
    கற்பு !

    ReplyDelete
  60. பெண்ணியம் ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


    எழுத்திலும் அநீதி
    ஆண் நெடில் தொடக்கம்
    பெண் குறில் தொடக்கம் !

    கணவனை இழந்தவள்
    விதவை சரி
    மனைவியை இழந்தவன் ?

    மணமான பெண்ணிற்கு
    தாலி அடையாளம் சரி
    மணமான ஆணிற்கு ?
    .
    ஆட்டிற்குப் பெண் பிறந்தால் மகிழ்ச்சி
    மாட்டிற்குப் பெண் பிறந்தால் மகிழ்ச்சி
    பெண்ணிற்குப் பெண் பிறந்தால் ஏன் இகழ்ச்சி ?

    ReplyDelete
  61. ஹைக்கூ! கவிஞர் இரா .இரவி !

    வசப்படுவதில்லை
    வாசிக்கும் அனைவருக்கும்
    புல்லாங்குழல் !

    வைத்துக்கொள்வதில்லை
    வந்த காற்றை
    புல்லாங்குழல் !

    வரைந்திட்ட
    ஓவியர் யாரோ
    மயில் தோகை !


    தோற்றுப்போனேன்
    பிடிக்க முயன்று
    வண்ணத்துப்பூச்சி !


    முறைத்துப்பார்த்தான்
    சோம்பேறி
    வண்ணத்துப்பூச்சி !

    ஞானப்பால் வேண்டாம்
    பசும்பால் போதும்
    பசித்து அழும் குழந்தை !


    மூலமொழி
    உலகமொழி ஆங்கிலத்திற்கும்
    தமிழ் மொழி !

    வசந்தத்திற்கு மகிழவுமில்லை
    இல்லை உதிர்வுக்கு வருந்தவுமில்லை
    மரம் !

    மகிழ்ச்சி என்று தொடங்கி
    துன்பத்தில் முடிந்தது
    மது !

    மனிதர்களில் மட்டுமல்ல
    புறாக்களிலும் உண்டு
    கருப்பு வெள்ளை !

    வழிவகுத்தன
    விபத்திற்கு
    ஆபாச சுவரொட்டிகள் !

    உண்டால் பலம்
    கிளைகள் பலமில்லை
    முருங்கை !

    பெருகியது
    முதிர்கன்னிகள் மட்டுமல்ல
    முதிர் காளைகளும்தான் !

    ReplyDelete
  62. பட்டாசு சத்தம் ! கவிஞர் இரா .இரவி !

    பட்டாசு சத்தம் கேட்கும் போதெல்லாம்
    பரவவில்லை மகிழ்ச்சி என்றும் எனக்கு !

    பட்டாசு சத்தம் கேட்கும் போதெல்லாம்
    படரும் கொடிய தீயே நினைவில் வருகிறது !

    பட்டாசு விபத்தால் உயிரிழந்த பல
    பரிதாபங்கள் நினைவில் வருகின்றன !

    பட்டாசுப் பட்டு பாவம் சிறிய
    பிஞ்சுகள் கூட கருகியதுண்டு !

    கோயில் விழாவில் பட்டாசு வெடித்த
    கொடூரங்கள் நினைவில் வருகின்றன !

    தீபாவளியன்றே பட்டாசு விபத்தால்
    தீயுக்கு இரையான நிகழ்வு நினைவுக்கு வந்தது !

    தீபாவளியன்றே குடியிருந்த கூரையில்
    தீப்பிடித்து குடிசை இழந்தோர் உண்டு !

    பட்டாசு செய்யும் தொழிலுக்கு வந்து
    படிப்பை விட்டோர் நினைவுக்கு வருகின்றனர் !

    பட்டாசு தொழிற்சாலை விபத்தில்
    பலியான தொழிலாளர்கள் நினைவு வந்தது !.

    ஏழைக்குழந்தை பட்டாசு கிடைக்காமல்
    ஏங்கிய நிலைகளும் நினைவிற்கு வந்தது !

    பட்டாசு விபத்தால் ஆதரவற்றோர் ஆன
    பல குடும்பங்கள் நினைவில் வந்தன !

    கரி காசாகுது நெய்வேலியில்
    காசு கரியாகுது தீபாவளியில் நினைவிற்கு வந்தது !

    பட்டாசுக்கு வீணாய் செலவிடும் பணத்தை
    பண்போடு ஆதரவற்றோர் விடுதிக்கு வழங்கலாம் !

    பட்டாசுக்கு வீணாய் செலவிடும் பணத்தை
    பயன் தரும் நூல்கள் வாங்கி மகிழலாம் !

    ReplyDelete
  63. பட்டாசு சத்தம் ! கவிஞர் இரா .இரவி !

    பட்டாசு சத்தம் கேட்கும் போதெல்லாம்
    பரவவில்லை மகிழ்ச்சி என்றும் எனக்கு !

    பட்டாசு சத்தம் கேட்கும் போதெல்லாம்
    படரும் கொடிய தீயே நினைவில் வருகிறது !

    பட்டாசு விபத்தால் உயிரிழந்த பல
    பரிதாபங்கள் நினைவில் வருகின்றன !

    பட்டாசுப் பட்டு பாவம் சிறிய
    பிஞ்சுகள் கூட கருகியதுண்டு !

    கோயில் விழாவில் பட்டாசு வெடித்த
    கொடூரங்கள் நினைவில் வருகின்றன !

    தீபாவளியன்றே பட்டாசு விபத்தால்
    தீயுக்கு இரையான நிகழ்வு நினைவுக்கு வந்தது !

    தீபாவளியன்றே குடியிருந்த கூரையில்
    தீப்பிடித்து குடிசை இழந்தோர் உண்டு !

    பட்டாசு செய்யும் தொழிலுக்கு வந்து
    படிப்பை விட்டோர் நினைவுக்கு வருகின்றனர் !

    பட்டாசு தொழிற்சாலை விபத்தில்
    பலியான தொழிலாளர்கள் நினைவு வந்தது !.

    ஏழைக்குழந்தை பட்டாசு கிடைக்காமல்
    ஏங்கிய நிலைகளும் நினைவிற்கு வந்தது !

    பட்டாசு விபத்தால் ஆதரவற்றோர் ஆன
    பல குடும்பங்கள் நினைவில் வந்தன !

    கரி காசாகுது நெய்வேலியில்
    காசு கரியாகுது தீபாவளியில் நினைவிற்கு வந்தது !

    பட்டாசுக்கு வீணாய் செலவிடும் பணத்தை
    பண்போடு ஆதரவற்றோர் விடுதிக்கு வழங்கலாம் !

    பட்டாசுக்கு வீணாய் செலவிடும் பணத்தை
    பயன் தரும் நூல்கள் வாங்கி மகிழலாம் !

    ReplyDelete